கொரோனா தொற்றில் இருந்து மீண்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. டெல்டாவில் இருந்து உருமாறிய ஓமிக்ரான் என்ற வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாக விஞ்ஞானிகளாலும் மருத்துவர்களாலும் கூறப்படுகிறது.

இது தற்போது ஆரம்ப நிலையிலேயே அதிகமாக பரவி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த தொற்றில் இந்தியாவில் ஆரம்பித்துள்ள முதல் கட்டத்திலேயே கிரிக்கெட் வீரர் கங்குலி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வாரம் கொரோனாவில் பாதிக்கப்பட்டார். கடந்த ஒரு வார காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரவிந்த் கெஜ்ரிவால் இன்று முழுமையாக கொரோனா குணமடைந்து வீடு திரும்பினார்.

அரவிந்த் கெஜ்ரிவால் குணமடைந்து திரும்பியதால் அவரது கட்சித்தொண்டர்கள் மகிழ்ச்சியைடந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment