Connect with us

அதிகரிக்கும் கொரோனா: ஆட்சியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

202105231545311120 Tamil News Tamil News Corona infection in 18 people on the same street SECVPF

தமிழகம்

அதிகரிக்கும் கொரோனா: ஆட்சியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா  தொற்று அதிகரித்து வரும் நிலையில் சமீபத்தில் தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தி அனைத்து பொதுமக்களும் தனிமனித இடைவெளியை கடைபிடித்து மாஸ்க் அணிவது கட்டாயம் என தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் சென்னை, செங்கல்பட்டு, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதனால் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மருத்துவத்துறை செயலாளர் செந்தில்குமார் கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

இதில் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் படுக்கைகளை தயாராக வைத்திருக்குமாறு கூறியுள்ளார். லேசான அறிகுறிகள் இருந்தால் பாரசிடமால், சீங்க், விட்டமின் சி மாத்திரைகள் கொடுத்து அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வீட்டில் தனிமையில் இருப்பவர்கள் ஆக்சிஜன் அளவை ஆக்சி மீட்டர் மூலம் பரிசோதிக்குமாறு கூறியுள்ளார். அதோடு கொரோனா அதிகரித்து வருவதால் 50 முதல் 100 படுக்கைகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும், வடமாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனாவின் எதிரொலியாக தற்போது தமிழகத்திலும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top