முடிவுக்கு வந்துவிட்டது கொரோனா 3ம் அலை !! அப்போ 4 – வது அலை ?

கொரோனாவின் தாக்கமானது இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர். இருப்பினும் இந்த வைரஸ்சை  இன்னும் கட்டுக்குள்  கொண்டுவர முடியவில்லை.

இதனை தடுக்க ஒன்றிய அரசு ஊரடங்கை அமலுக்கு கொண்டு வந்தது. சுமார் கடந்த இரண்டரை ஆண்டுகளில் பல்வேறு உருமாற்றங்களை அடைந்துள்ளது கொரோனா 3ம் அலையாக பரவி தற்போது குறைந்து கொண்டு வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா 3ம் அலை பரவல் முடிவுக்கு வந்துவிட்டதை உறுதியுடன் கூறலாம் என்று மூத்த மருத்துவ நிபுணரும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் தலைவருமான ஜேக்கப் ஜான் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் 4- வது அலை எப்போது பரவும் என்ற கேள்வி அனைவர் இடத்திலும் கேள்வியெழுப்பி வருகிறது. இதனிடையே வருகின்ற ஜூன் மாதம் 22ம் தேதி தொடங்கி அக்டோபர் 24ம் தேதி வரை நீடிக்கும் என தெரிவித்து உள்ளனர்.

தற்போது கொரோனாவின் 4- வது அலை இந்தியாவில் பரவ வாய்ப்பில்லை என பிரபல மருத்துவ நிபுணர் கூறியிருப்பது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment