இந்தியாவில் இதுவரை இரண்டு விதமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த இரண்டு தடுப்பூசிகளும் இரண்டு டோஸ்களாக பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏனென்றால் இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் காரணமாக பூஸ்டர் தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நம் இந்தியாவில் டெல்டா வைரஸின் தாக்கம் ஏற்ற இறக்கத்தோடு உள்ளது.
இதனால் நோய் எதிர்ப்பு திறன் குறைந்தவர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்க பல தரப்பினர் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். உலக சுகாதார அமைப்பும் கொரோனாவால் கொல்லப்பட்டு உருவாக்கப்பட்ட தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் தாராளமாக மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்தலாம் என்றும் கூறியிருந்தது.
இதனால் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு செலுத்தப்படும் கோவாக்சின் தடுப்பூசி கொரோனாவால் கொல்லப்பட்ட கிருமிகளால் உருவாக்கப்பட்டது என்பதால் பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.