விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர்.
இப்படம் கடந்த 13 ஆம் தேதி வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது, மேலும் தற்போது வரை இப்படம் 180 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக பேசப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் பெரியளவில் ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளது, அதுமட்டுமின்றி இப்படத்தில் அவர் கூறியுள்ள ஒரு வசனம் தீயாய் பரவி வருகிறது.
ஆம், நெருப்பு கோழி குறித்து அவர் கூறியுள்ள வசனம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம். ஆனால் இப்படத்திற்கு முன்னரே விஜய் சேதுபதியிடம் விக்ரம் வேதா படத்தில் கதிர் இதேபோல் வசனம் பேசியுள்ளார்.