Connect with us

சென்னை செஸ் ஒலிம்பியாட்போட்டி: முதலமைச்சர் தலைமையில் ஒருங்கிணைப்புக்குழு-அரசாணை வெளியீடு!

chess olympiad

News

சென்னை செஸ் ஒலிம்பியாட்போட்டி: முதலமைச்சர் தலைமையில் ஒருங்கிணைப்புக்குழு-அரசாணை வெளியீடு!

சென்னை செஸ் ஒலிம்பியாட்போட்டி: முதலமைச்சர் தலைமையில் ஒருங்கிணைப்புக்குழு-அரசாணை வெளியீடு!

நம் தமிழகமே பெருமைப்படக்கூடிய அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதன்படி இந்த முறை செஸ் ஒலிம்பியாட் போட்டி  தமிழகத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு கட்டமாக ஒலிம்பியாட் போட்டியில் முதலமைச்சர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 44வது சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பு குழுவில் பொதுப்பணித்துறை அமைச்சர், விளையாட்டு துறை அமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இந்த 44வது சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை சென்னை அருகே நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top