கூட்டுறவு நகைக்கடன்களை உடனே வசூலிக்க வேண்டும்: தமிழக அரசு உத்தரவு

30608df36960f69ace0a6406bfa084ba

கூட்டுறவு வங்கியின் கடன்களை உடனே வசூல் செய்ய வேண்டும் என தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குனர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சமீபத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் 5 சவரன்களுக்குள் நகை அடமானம் வைத்து கடன் வாங்கியவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தார். ஆனால் அதே நேரத்தில் தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி 5 சவரனுக்கு மேல் அடமானம் வைத்து கடன் வாங்கியவர்கள் கடன் கட்டவில்லை என்றால் அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்து பணத்தை வசூலித்து மாறும் அனைத்து கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment