திமுகவில் பரபரப்பு! கூட்டுறவுத் துறை செயலாளர் சென்ற கார் விபத்து.!

சென்னை பட்டினப்பாக்கத்தில் சுனாமியால் இறந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்த வந்த கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது.

சென்னை பட்டினப்பாக்கம் நொச்சி குப்பம் பகுதியில் சுனாமியால் இறந்தவர்களுக்கு 18-ம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கார் மூலம் சென்றுகொண்டிருந்தார்.

பொங்கல் பரிசு ரூ.1000 டோக்கன் எப்போது கிடைக்கும்? – விவரம் இதோ!

அப்போது மேல் மருவத்தூர் சென்ற பக்தர்கள் வேன் ராதாகிருஷ்ணன் சென்ற கார் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் சேதமடைந்த நிலையில் அதிஷ்டவசமாக ராதாகிருஷ்ணன் மற்றும் அவருடைய ஓட்டுனருக்கு எந்த ஒரு காயம் ஏற்படவில்லை என தெரிகிறது.

இதனையடுத்து மற்றோரு காரில் நினைவஞ்சலி செலுத்த சென்றுள்ளதாகவும், பின்னர் செய்தியாளர் சந்திப்புக்கு பிறகு மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் காரில் சென்று கொண்டிருக்கிறார்.

அடுத்த 3 மணி நேரம்… இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் சார்பில் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அதிவேக வேன் வந்ததால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.