வெளுத்து வாங்கும் கனமழை; இன்று இங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை!

தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் குன்னூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒருவாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் வேறோடு சாய்ந்துள்ளன. சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் மட்டும் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அம்பிகாபுரம், டிடிகே சாலை, இந்திராநகர், வண்டிச்சோலை ஆகிய பகுதிகளிலும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால், அதனை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே நேற்று இரவு முதலே குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், அவ்விரு தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.