இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போறது இவர் தானா?.. விசித்ராவை அந்த கிழி கிழிச்சாரே!..

சிம்புவின் நண்பர்:

நடிகர் சிம்பு நடித்த காதல் அழிவதில்லை படத்தில் இருந்து அவரது நண்பராக பல படங்களில் நடித்து வந்தார் நடிகர் கூல் சுரேஷ். ஒரு கட்டத்துக்கு மேல் சிம்பு படங்களில் கூட அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. சில ஆண்டுகள் ஆல் அட்ரஸே தெரியாமல் காணாமல் போன நிலையில், சந்தானம் படங்களில் தலை காட்ட ஆரம்பித்தார்.

சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்திற்காக அவர் தியேட்டர்களில் செய்த புரோமோஷன் அவரை ட்ரெண்டிங்கில் கொண்டு வந்துவிட்டது. தொடர்ந்து அதே போல ஒவ்வொரு படத்திற்கும் முதல் நாள் அன்று தியேட்டருக்கு சென்று விதவிதமான கெட்டப்புகளில் படம் பற்றிய விமர்சனங்களை கொடுத்து வைரலாகி வந்தார்.

விசித்ராவை எதிர்த்து:

மீண்டும் பழையபடி சினிமாவில் அதிக அளவில் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. அதேசமயம் மன்சூர் அலிகானின் சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தொகுப்பாளினி ஒருவரை டார்ச்சர் செய்யும் விதமாக அவருக்கு விருப்பம் இல்லாத நிலையில் அவரது கழுத்தில் மாலை போட்டு வம்பு இழுத்தார். அதே மேடையில் மாலையை தூக்கி ஐஸ்வர்யா எனும் அந்த தொகுப்பாளினி போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அதற்காக கூல் சுரேஷ் மன்னிப்பும் கேட்டார்.

இதற்கு மேல் கூல் சுரேஷ்க்கு எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது போன்ற நபர்களை தேடித்தான் வாய்ப்பு தந்து கொண்டிருக்கிறோம் என பிக் பாஸ் நிகழ்ச்சி அவரை அன்புடன் அழைத்துக் கொண்டது.

இந்த வாரம் கூல் சுரேஷ் தான்:

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட கூல் சுரேஷ் 70வது நாளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார். இதுவரை அமைதியாக இருந்த கூல் சுரேஷ், இந்த வாரம் விசித்ரா அவரை நாமினேட் செய்தவுடன் பொங்கி எழுந்து, நீங்க எல்லாம் பிக் பாஸ் வீட்டில் கூட இல்லை தமிழ்நாட்டில் இருக்கவே தகுதி இல்லை என வெளுத்து வாங்கிவிட்டார்.

இந்த வாரம் பிக் பாஸ் நாமினேஷனில் நிக்சன், கூல் சுரேஷ், அர்ச்சனா, விஷ்ணு, தினேஷ் மற்றும் அனன்யா ராவ் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். விசித்ரா, மாயா, பூர்ணிமா, ரவீனா தாகா, மணிகண்டன், விஜய் வர்மா, விக்ரம் உள்ளிட்ட பலர் இந்த வாரம் நாமினேட் ஆகாமல் தப்பித்துக் கொண்டனர்.

கடந்த வாரம் நிக்சன் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எலிமினேஷன் இல்லை என விஜய் டிவி அவரை காப்பாற்றி விட்டது. இந்த வாரம் நிக்சன் வெளியேற மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக கூல் சுரேஷ்தான் பலியாடு என்கிற கணிப்புகளும் வெளியாகியுள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.