பிக்பாஸ் போயிருச்சு, குக் வித் கோமாளி வந்துருச்சு.. அதிகாரபூர்வ அறிவிப்பு

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 105 நாட்களாக நடைபெற்ற நிலையில் இந்த நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவு பெற்றது என்பதும் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் அசீம் டைட்டில் வின்னராக தேர்வு பெற்றார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முடிவடைந்த அடுத்த வாரமே குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஆரம்பிக்க உள்ளதாக விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து விஜய் டிவி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி ஜனவரி 28ஆம் தேதி சனிக்கிழமை முதல் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

cwc 4ஒவ்வொரு ஆரம்பம் சனி ஞாயிறு ஆகிய கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற மூன்று சீசன்களில் வனிதா, கனி மற்றும் ஸ்ருதிகா ஆகிய மூவர் டைட்டில் பட்டம் என்ற நிலையில் நான்காவது சீசனில் பங்கேற்கும் குக்குகள் யார்? இவர்களில் யார் டைட்டில் வின்னர் பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த நிலையில் குக் வித் கோமாளி சீசன் 4 பொறுத்தவரை பார்வையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் கோமாளிகள் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இருந்த கோமாளிகளான பாலா, புகழ், குரேஷி, ஷிவாங்கி உள்ளிட்டோர் இந்த சீசனில் இல்லை என்பது பார்வையாளர்களுக்கு பெரும் அதிருப்தி தான்.

ஆனால் அதே நேரத்தில் பாலா, புகழ், ஷிவாங்கி ஆகியோர் திரையுலகில் பிஸியாக இருப்பதால் அவ்வப்போது மட்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சீசனின் கோமாளிகளாக மணிமேகலை, ஜி.பி முத்து, சிங்கப்பூர் தீபன், சுனிதா, மோனிஷா, ரவீனா மற்றும் ஓட்டேரி சிவா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை மிஸ் செய்த ஜிபி முத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் விஜய் டிவியில் பிக் பாஸ் போய், குக் வித் கோமாளி வந்துள்ளதால் விஜய் டிவிக்கு என இருக்கும் ரசிகர்கள் தொடர்ந்து மகிழ்ச்சியில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.