விஜய் டிவியிலிருந்து விலகி விட்டாரா புகழ்: என்ன காரணம்?

d1224a379ab15363a83e6ec37291365e

விஜய் டிவியில் பிரபலங்களில் ஒருவரான புகழ் அந்த டிவியில் இருந்து விலகிவிட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி விஜய் டிவி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது

குக் வித் கோமாளி சீசன் 1 மற்றும் சீசன் 2 ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளின் மூலம் வேற லெவலில் பிரபலம் ஆனவர்களில் ஒருவர் புகழ் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பிரபலம் காரணமாக புகழ் பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது அவர் ஒரே நேரத்தில் 15 திரைப்படங்களில் நடித்து வருவதாக கூறப்பட்டது

இந்த நிலையில் சினிமாவில் பிசியாக இருக்கும் காரணத்தினால் கால்ஷீட் பிரச்சினை ஏற்படக் கூடாது என்பதற்காக விஜய் டிவியின் நிகழ்ச்சிகளிலிருந்து புகழ் விலகி விட்டதாகவும் சில காலம் அவர் விஜய் டிவி நிகழ்ச்சிகள் வர மாட்டார் என்றும் கூறப்படுகிறது. இதனால் விஜய் டிவி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 

இருப்பினும் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் அவர் கண்டிப்பாக கலந்து கொள்வார் என்றும் அவர் இல்லாமல் போனால் நிகழ்ச்சி நடைபெற வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.