Connect with us

சமையல் எண்ணெய் விலை மேலும் 10% அதிகரிக்கும் : அதிர்சியில் இல்லதரசிகள் !!

best cooking oil 14 1500013045

Tamil Nadu

சமையல் எண்ணெய் விலை மேலும் 10% அதிகரிக்கும் : அதிர்சியில் இல்லதரசிகள் !!

சமையல் எண்ணெய் விலை மேலும் 10% அதிகரிக்கும் : அதிர்சியில் இல்லதரசிகள் !!

உக்ரைன் – ரஷ்ய நாடுகளுக்கு இடையே கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போர் நிலவி வருகிறது. இதனால் அந்நாட்டில் பல அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றன.

இந்த சூழலில் இரு நாடுகளுக்கிடையேயான போரின் எதிரொலியாக கச்சா எண்ணெயை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் லாரிகளின் வாடகை 25 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் சமையல் எண்ணெய் விலை மேலும் 10 சதவீதம் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் கூறியுள்ளனர்.

இதனிடையே சமையலுக்கு பயன்படுத்தும் சூரியகாந்தி எண்ணெய் இந்தியாவிற்கு 70 சதவீதம் உக்ரைன் நாட்டில் இருந்து மட்டுமே வருகிறது. ஆனால் உக்ரைன் நாட்டில் போர் நிலவி வருவதால் சமையல் எண்ணெய் விலையும்  உச்சத்தை தொட்டுள்ளது.

ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலையை தொடர்ந்து சுங்க கட்டணம் உயர்ந்திருக்கும் நிலையில் தற்போது லாரிகள் வாடகை 25 சதவீதம் அதிகரிப்பு காரணத்தினால் சமையல் எண்ணெய் விலை மேலும் அதிகரிப்பது இல்லதரசிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top