Connect with us

நாடு முழுவதும் சமையல் எண்ணெய் விலை மேலும் ரூ.5 உயருகிறது..

best cooking oil 14 1500013045

செய்திகள்

நாடு முழுவதும் சமையல் எண்ணெய் விலை மேலும் ரூ.5 உயருகிறது..

நாடு முழுவதும் சமையல் எண்ணெய் விலை மேலும் ரூ.5 உயருகிறது..

சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட மாற்றங்களின் காரணமாக கடந்த மாதம் துவக்கத்திலிருந்தே சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. இந்நிலையில் இந்த மாத இறுதியில் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் மீண்டும் உயரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி லிட்டருக்கு ரூ. 5 என உயர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதனிடையே சூரியகாந்தி எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய்யின் விலை கடந்த மாதம் லிட்டருக்கு 40 முதல் 50 ரூபாய் வரை உயர்ந்தது.

தற்போது 180 முதல் 210 வரையில் விற்பனையாகிறது. அதே போல நல்லெண்ணெய் விலையும் 250 முதல் 350 வரையில் விற்பனையாகிறது. இதனால் சாமானிய மக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

இந்த சூழலில் இந்தோனேசியாவில் இருந்து எண்ணெய்களை ஏற்றுமதி செய்வதற்கு தடை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்தியாவிற்கு 40 லட்சம் டன் எண்ணெய் இறக்குமதி குறையும் என்பதால் சில்லரை விற்பனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

இதனால் இந்த மாத இறுதியில் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் விலை ரூ. 5 உயர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top