சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.50 வரை உயர்வு! – குறைய வாய்ப்பிருக்கா?

உக்ரைனில் நடக்கும் போர் காரணமாக சமையல்  எண்ணெய் விலை லிட்டருக்கு 50 ரூபாய் அதிகரித்து உள்ளது. உலக அளவில் சமையலுக்கு பயன்படுத்தும் சூரியகாந்தி எண்ணெயை உக்ரைன் அதிக அளவில் உற்பத்தி செய்து வருகிறது.

தற்போது போர் அங்கு நடைபெற்று வருவதால் சமையலுக்கு பயன்படுத்தும் சூரியகாந்தி எண்ணெயை ஏற்றுமதி செய்யப்படாத சூழ்நிலையில் உள்ளது. இதனால் போருக்கு முன்பு 140 ரூபாய்க்கு விற்க்கப்பட்ட சூரிய காந்தி எண்ணெய் தற்போது 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

சில்லறை வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சூரியகாந்தி எண்ணெய் மற்றும் பாமாயில் எண்ணெய் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் இல்லதரசிகள் கவலை அடைந்துள்ளது.

போர் இப்போது முடிவுக்கு வராது என்பதால் சந்தையில் சமையல் எண்ணெய் விலை தட்டுப்பாடு நிலவும். இதனால் சமையல் எண்ணெய் விலை மேலும் உயரும் என்பதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment