சமையல் கேஸ் விலை உயர்வு: எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு!

2eb79b57a9e186af22fcbf108d6eee50

கடந்த சில மாதங்களாக சமையல் கேஸ் விலை ரூபாய் 25 அவ்வப்போது உயர்த்தப்பட்டு வருகிறது என்பதும் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ரூபாய் 285 சமையல் கேஸ் விலை உயர்த்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் இன்று மீண்டும் சமையல் கியாஸ் விலை ரூபாய் 25 உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது இல்லத்தரசிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

இன்று முதல் சமையல் கேஸ் விலை ரூபாய் 25 உயர்ந்தது. இதனை அடுத்து சமையல் சிலிண்டர் ஒன்றின் விலை ரூபாய் 900.50  என விற்பனை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது 

அதேபோல் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையும் இன்று முதல் உயர்ந்துள்ளது வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை இன்று முதல் ரூபாய் 75 உயர்த்தப்பட்டு ஒரு சிலிண்டரின் விலை ரூபாய் 1831.50 என விற்பனை செய்யப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன 

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment