News
இன்று முதல் உயர்ந்தது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை!
இன்று முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளதாகவும் இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினசரி எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகிறது என்பது தெரிந்ததே. இதனால் ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் கடும் சிக்கல் உள்ளனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் பெரும் சிரமத்தில் இருக்கும் மக்களுக்கு தற்போது மீண்டும் ஒரு அதிர்ச்சியாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுவும் இன்று முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது
விலையேற்றத்திற்கு பின்னர் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.850.50 என விற்பனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் எரிவாயு சிலிண்டர் ரூ.825.50 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும் வணிகரீதியிலான எரிவாயு சிலிண்டர் விலையும் ரூபாய் 84.50 உயர்த்தப்பட்டுள்ளதால் வணிக ரீதியான சிலிண்டர் விலை இன்று முதல் ரூ.1,687.5 0 என விற்பனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
