Connect with us

சமையல் கேஸ் சிலிண்டர் விலை திடீர் உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி!

Tamil Nadu

சமையல் கேஸ் சிலிண்டர் விலை திடீர் உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி!

595709011194b67c252f39e5c4b453cb

ஏற்கனவே ஒரு பக்கம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக ஏழை எளிய நடுத்தர மக்கள் கடும் சிரமத்தில் உள்ள நிலையில் தற்போது சமையல் கேஸ் விலை உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

பெட்ரோல் மற்றும் டீசல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. தமிழக அரசின் வரி குறைப்பு காரணமாக தற்போது தான் பெட்ரோல் 100 ரூபாய்க்குள் உள்ளது. இதனால் சற்று நிம்மதி அடைந்திருந்த பொதுமக்களுக்கு பேரதிர்ச்சியாக சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்த அறிவிப்பு பெரும் சிக்கலில் உள்ளது 

சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூபாய் 25 அதிகரித்துள்ளதாகவும் இதனையடுத்து இன்று முதல் சமையல் கியாஸ் விலை ரூபாய் 875.50 என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்னர் சமையல் கேஸ் சிலிண்டர் விலை 850.50 ரூபாய் என இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த எட்டு மாதங்களில் சமையல் கேஸ் சிலிண்டர் மட்டும் ரூபாய் 165 அதிகரித்துள்ளது என்பது அதிர்ச்சிக்குரிய ஒரு தகவல் ஆகும். சமையல் கேஸ் உயர்வுக்கு மத்திய அரசை பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top