எம்மாடியோ..!!! ‘குக் வித் கோமாளி 3’ டைட்டில் வின்னருக்கான பரிசுத்தொகை இத்தனை லட்சமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக இந்த நிகழ்ச்சியை பார்க்க தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்றும் கூறலாம்.

அந்த வகையில் காமெடி மற்றும் கலக்கல் சமையல்கள் அனைவரது மனதையும் கவர்ந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பலருக்கும் சினிமா வாய்ப்புகளும் கிடைத்துள்ளது.

தற்போது சீசன் -3 நிகழ்ச்சியானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அம்மு அபிராமி, வித்யூலேகா, தர்ஷன், ஸ்ருத்திகா உள்ளிட்டோர் பைனலுக்கு முன்னேறிய உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சீசனில் டைட்டில் வின்னருக்கு ரூபாய் 5 லட்சம் மட்டும் பரிசுத்தொகையாக வழங்கிய நிலையில் தற்போது இரு மடங்காக உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் நடிகர் தேங்காய் சீனிவாசன் பேத்தி ஸ்ருதிகாவிற்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகை கிடைத்திருப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment