Entertainment
மலையாள இளம் நடிகருடன் ஜோடி போடும் குக் வித் கோமாளி பவித்ரா?
குக் வித் கோமாளி புகழ் பவித்ரா நடிக்கும் திரைப்படத்தின் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.
விஜய் டிவியில் சூப்பர் ஹிட் அடித்து ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ குக் வித் கோமாளி. தற்போது இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டுள்ள பவித்ரா லக்ஷ்மி, தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில் பவித்ரா லக்ஷ்மி நடிக்கும் திரைப்படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மலையாளத்தில் இளம் நடிகராக கலக்கி வரும் ஷேன் நிகம் என்பவருடன் இவர் உல்லாசம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் இந்த வருடம் வெளியாகவுள்ளது.
இத்திரைப்படத்தின் புகைப்படங்களை கண்ட ரசிகர்கள், பவித்ராவின் துள்ளலான போஸ்களை ரசித்து வருவதுடன், இந்த போட்டோஸ் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
