Entertainment
மணிரத்னம் படத்தில் குக் வித் கோமாளி அஷ்வின் .. வைரலாகும் புகைப்படம்!
குக் வித் கோமாளி புகழ் அஷ்வினின் புகைப்படம் இணையத்தில் செம வைரல் அடித்து வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நகைச்சுவை சமையல் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. ரசிகர்களின் வரவேற்புடன் இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழகம் முழுவதிலும் ரசிகர்களை கவர்ந்துள்ளவர் அஷ்வின். மேலும் இவர் நடிகர் சிவகார்த்திகேயனிடமும் பாராட்டுக்களை பெற்று கவனிக்க வைத்தார்.
இந்நிலையில் தற்போது மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி திரைப்படத்தில் அஷ்வின் இடம்பெற்ற புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. துல்கர் சல்மான் இடம்பெறும் காட்சி ஒன்றில், அஷ்வின் இருப்பதை கவனித்த நெட்டிசன்ஸ், அதை இணையத்தில் பதிவிட, இந்த போட்டோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
