
தமிழகம்
சாதி குறித்த சர்ச்சை ‘கேள்வி’ விவகாரம்: உயர்மட்டக்குழு விசாரணை!
சேலம் பெரியார் பல்கலைக்கழக பருவத் தேர்வில் சாதி குறித்து வினாத்தாள் கேட்கப்பட்டதால் பெரும் பெரும் சர்ச்சை நிலவியது. இந்நிலையில் உயர்மட்ட குழு தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் பெரியார் கல்லூரியில் இரண்டாம் பருவத் தேர்வு வினாத்தாளில் சாதியை குறித்து கேள்வியெழுப்ப பட்டதால் பெரும் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக உயர்கல்வித்துறை துணை செயலாலர் தனசேகர், மாவட்ட வருவாய் அலுவலர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் குழுவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவானது விசாரணை தொடர்பான அறிக்கையை ஒரு மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
மேலும், விசாரணை அறிக்கை தாக்கல் செய்த பிறகு தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
