ஒவ்வொருவரின் மத உணர்வுகளை மதித்தால் சர்ச்சை எழாது; கலவரத்தில் பீகார் முதல்வர் பேட்டி!
இந்தியாவிலேயே பெரும் பிரச்சனையாக உருமாறியுள்ளது ஹிஜாப் விவகாரம். கர்நாடகாவில் பல மாதங்களுக்கு பின்பு பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டது. அப்போது இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து பாடசாலைக்கு சென்றனர்.
அவர்களை ஹிஜாப் அணிய கூடாது என்றும் தடுத்தனர். அதே வேளையில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை வகுப்பறைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கர்நாடக மாநிலத்தில் மாணவர்கள் மத்தியில் பெரும் கலவரம் நிலவியது.
எனவே கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கர்நாடகாவில் உள்ள உயர்நிலை, மேல்நிலை மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளார். கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஹிஜாப் விவகாரம் வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில் கர்நாடக மாநில முதல்வர் பத்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளை திறக்க அனுமதி அளித்துள்ளார். இருப்பினும் ஹிஜாப் விவகாரம் ஓயவில்லை என்றே கூறலாம். இதுகுறித்து பீகார் மாநில முதல்வர் கருத்து கூறியுள்ளார்.
அதன்படி பீகார் மாநிலத்தில், ஹிஜாப் உள்ளிட்ட அவரவர் மத அடையாளங்களுடன் வரும் மாணவ மாணவிகளை தடுப்பதில்லை என்று கூறினார். ஒவ்வொருவரின் மத உணர்வுகளை மதித்தால் அதுகுறித்த எந்த சர்ச்சையும் எழுப்புவதில்லை என்றும் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் கூறினார்.
கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அதுகுறித்து பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் பேட்டி அளித்துள்ளார். தனிநபரின் மத நம்பிக்கை மற்றும் கலாச்சாரத்தில் ஒருபோதும் நாங்கள் தலையிட மாட்டோம் என்று பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் கூறினார்.
