சென்னையில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை: புகார் எண் அறிவிப்பு!

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக மழை மற்றும் வெள்ள சேதம் குறித்த மீட்பு நடவடிக்கைகளை உடனடியாக 1913 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

சென்னை மாநகராட்சி இது குறித்து மேலும் கூறிய போது சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக மழை, வெள்ள சேதங்கள் குறித்து விவரங்களை பொதுமக்கள் 1913 என்ற எண்ணுக்கு தெரிவிக்கலாம் என்றும் தகவல் கிடைத்ததும் உடனடியாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து மீட்பு பணிகளில் ஈடுபடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னை மாநகராட்சி இதற்காக சிறப்பு கட்டுப்பாட்டு அறை ஒன்றை அமைத்து உள்ளதாகவும் அதில் 50 இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த இணைப்புகளில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு மழை நிலவரங்கள் மழை, வெள்ள சேத விபரங்களை அறிவிக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

எனவே சென்னை மக்கள் தங்கள் பகுதியில் மழை வெள்ளம் குறித்த சேதங்கள் ஏற்பட்டால் உடனடியாக 1913 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment