தொடர்ந்து மூன்றாவது நாளாக வால்பாறை பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை!!!

தொடர்ந்து நம் தமிழகத்தில் கனமழை பெய்து கொண்டு வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் காவிரி நீர் வரத்தும் அதிகமாக வந்து கொண்டுள்ளன. இதனால் வெள்ள அபாய எச்சரிக்கை ஒவ்வொரு டெல்டா மாவட்டங்களிலும் விடுக்கப்பட்டு வந்துள்ளன.

இந்த நிலையில் பல மாவட்டங்களில் விடாது இரவும் பகலும் கனமழை கொட்டி தீர்க்கிறது. இதனால் அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை தாலுகா பகுதியில் இன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடாமல் பெய்து வந்த கனமழையின் காரணமாக வால்பாறை வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர். தொடர்ந்து மூன்றாவது நாளாக வால்பாறை பகுதிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இன்றைய தினம் நீலகிரி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதிலும் நீலகிரி மாவட்டத்தில் கல்லூரிகளுக்கும் அளிக்கப்பட்டது மட்டும் இல்லாமல் உத்தரவை மீறி இயங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment