தொடர் காளி வழிபாடு ஞானத்தையும் புகழையும் தரும்

விஜய நகரத்தை ஆட்சி செய்தவர் மன்னர் கிருஷ்ண தேவராயர். இவரின் அரசவையில் அனைவரையும் சிரிக்க வைத்து உலகம் போற்றும் விகடகவியாக இருந்தவர் தெனாலிராமன். இவரை பற்றிய கதைகள் ஏராளம் என்றாலும் இவர் காளியின் பக்தர் ஆவார்.

காளியிடம் சாதாரணமாகவே பேசும் வல்லமை கொண்டவர். 10 தலையுடன் வந்த காளியை பார்த்து எங்களுக்கு ஒரு தலை வைத்து இருக்கும்போதே ஜலதோஷம் பிடித்தால் தாங்க முடியவில்லை இத்தனை தலை வைத்திருக்கும் உனக்கு ஜலதோஷம் பிடித்தால் என்ன செய்வாய் என காளிமாதாவிடமே கேட்டார். இவருக்கு அனைத்து ஞானத்தையும் வழங்கியது காளிதான்.

அதுபோல் உலக புகழ்பெற்ற கவி காளிதாஸனும் சிறந்த காளி பக்தன். ஆடு மேய்த்து ஏனோ தானோவென்று வாழ்ந்தவர் பிறகு காளியின் அருளால் சிறந்த கவிபாடும் திறனை பெற்றார். மேகதூதம், சாகுந்தலம், உத்தரகாலாமிர்தம், பூர்ண காலாமிர்தம் உள்ளிட்ட நூல்களை படைத்தவர் அனைத்தும் காளியின் அருளாலே சாத்தியமாயிற்று.

இதுபோல் விவேகானந்தரின் குருவான ராமகிருஷ்ண பரமஹம்சரும் தீவிர காளி பக்தர்தான். இப்படி உலகம்போற்றும் வகையில் ஞானத்துடனும் நல் அறிவுடனும் விளங்கியவர்கள் அனைவருமே காளியை வணங்கியவர்கள்தான்.

அதனால் தொடர் காளி வழிபாடு நல்ல பலன்களை தரும். வாழ்வில் முன்னேற்றத்தை தரும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews