இப்பவே இப்படின்னா கோடைகாலத்தில்!! தொடர்ந்து சரியும் நீர்வரத்து;

இன்னும் கோடை காலம் தொடங்கவில்லை அதற்குள்ளே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஆங்காங்கே நிலவுகிறது. அதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளுக்கும் வருகின்ற தண்ணீரின் அளவும் நாளுக்கு நாள் சரிந்து கொண்டே காணப்படுகிறது.

அந்த வகையில் கிருஷ்ணா நதி நீர் வரத்தானது இன்றும் சரிந்து காணப்படுவதாக தகவல் கிடைக்கிறது. தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுக்கு கிருஷ்ணா நதி நீர்வரத்து வினாடிக்கு 248 கன அடியில் இருந்து 212 கன அடியாக சரிந்துள்ளது.

ஆந்திரா மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து நீர் வரத்து திறப்பு வினாடிக்கு 1500 கன அடியாக உள்ளது. மேலும் பூண்டி நீர் தேகத்துக்கு நீர்வரத்து வினாடிக்கு 295 கனடியாக இருந்தது, ஆனால் இன்றோ 260 கன அடியாக குறைந்துள்ளது.

பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் புழல் ஏரிக்கு வினாடிக்கு 550 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் கோடை காலம் தொடங்குவதற்கு முன்னே அனைத்து விதமான நீர் நிலைகளிலும் தண்ணீர் வரத்தானது குறைந்து காணப்படுவதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.