எல்லையில் தொடரும் பதற்றம்! சீன அச்சுறுத்தலை வலிமையுடன் இந்தியா எதிர்கொள்கிறது!: ராணுவ தளபதி

என்னதான் உலகமெங்கும் ஒற்றுமையாக காணப்பட்டாலும் ஒவ்வொரு நாட்டிற்கும் பெரும் பிரச்சனையாக அமைவது எல்லை பிரச்சினை தான். அந்த வகையில் இந்தியாவிற்கு பெரும் பிரச்சனையாக சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகள் எல்லை பிரச்னையாக காணப்படுகிறது.

அதிலும் கடந்த சில நாட்களாக இந்தியா மீது சீனா ராணுவத்தினர் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் மத்தியில் இந்தியா மற்றும் சீனா இடையே பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டே வருகிறது.

இந்த சூழலில் இன்றைய தினமும் சீனா இந்தியா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதுகுறித்து இந்தியாவின் ராணுவ தளபதி நரவானே சில தகவல்களை கூறியுள்ளார். அதன்படி சீன அச்சுறுத்தலை வலிமையுடன் இந்தியா எதிர்கொள்கிறது என்று கூறியுள்ளார்.

எல்லைகளில் சீனாவின் அச்சுறுத்தல் இந்தியா வலிமையுடன் எதிர்கொண்டு வருகிறது என்று ராணுவ தளபதி நரவானே கூறியுள்ளார். பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும் சீன எல்லையில் பதற்றம் நீடிக்கிறது என்றும் ராணுவ தளபதி நரவானே கூறினார்.

சீன எல்லையில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருவதாகவும் ராணுவ தளபதி நரவானே தெரிவித்தார். காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் ராணுவ தளபதி நரவானே கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment