Connect with us

கண்டெய்னர் லாரியின் ரோப் அறுந்து விபத்து!! திருவள்ளூரில் பரபரப்பு!!

accid

தமிழகம்

கண்டெய்னர் லாரியின் ரோப் அறுந்து விபத்து!! திருவள்ளூரில் பரபரப்பு!!

கடந்த சில நாட்களாகவே நம் தமிழகத்தைப் பொறுத்த வரையில் விபத்துக்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவற்றை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தப்போதிலும் இன்னும் குறைந்தபாடில்லை.

அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பாதுகாப்பற்ற முறையில் வாகன உதிரி பாகங்கள் ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் வாகன உதிரி பாகங்கள் ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரியின் ரோப் அறுந்ததாக கூறப்படுகிறது. அப்போது உதிரி பாகங்கள் விழுந்து கார் நசுங்கியது.

இந்த சூழலில் கார் ஓட்டுநர் வெளியே நின்றிருந்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இத்தகைய சம்பவமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இத்தகைய விபத்தினால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top