ஜூலை 4 முதல் கண்டெய்னர் லாரி ஓடாது: ஏன் தெரியுமா?

கண்டெய்னர் லாரிகளுக்கான வாடகையை உயர்த்தி தர வேண்டும் என ஜூலை 4 முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட போவதாக சென்னை மற்றும் காட்டுப்பள்ளி ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

சென்னை துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களில் ஒப்பந்த அடிப்படையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகள் சரக்கு எடுத்துச்செல்லும் பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த லாரிகளுக்கான வாடகை கட்டணம் கடைசியாக 2012-ஆம் ஆண்டு உயர்த்திதர பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 8 வருடங்களாக வாடகை உயர்த்தப்படாமல் இருப்பதாகவும் இதுதொடர்பாக துறைமுக அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே டீசல் விலை ஏற்றம் இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கருத்தில் கொண்டு 80% வாடகை உயர்த்தி தர வேண்டும் என துறைமுக ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதன் காரணமாக வருகின்ற ஜூலை 4-ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளனர். மொத்தமாக 14 சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment