தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? நாளை ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம்!

நம் இந்தியாவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதற்கு மிக முக்கிய காரணம் ஊரடங்கு தான். இந்த ஊரடங்கு தமிழகத்திலும் தொடர்ந்து சில நாட்களாகவே நடைபெற்று உள்ளது. குறிப்பாக தற்போதைய ஊரடங்கு டிசம்பர் 15-ம் தேதியோடு நிறைவடைய உள்ளது.

ஊரடங்கு

இந்தியாவில் ஒமைக்ரான் பரவலும் மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இதனால் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற குழப்பம் நிலவி வருகிறது. இது குறித்து சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

அதன்படி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நாளைய தினம் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வு துறை, சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ வல்லுநர்கள், அதிகாரிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து அறிந்து கொள்ளலாம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment