கொரோனா பரவல்: ஒன்பது மாநில சுகாதார அமைச்சர்களுடன் மன்சுக் மாண்டவியா ஆலோசனை! யார் யார் பங்கேற்பு?
எதிர்பாராத விதமாக இந்தியாவில் கடந்த ஆண்டு கட்டுப்படுத்தப்பட்ட கொரோனாவின் தாக்கம் ஒரு சில நாட்களில் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் கொரோனாவின் பாதிப்பு பதிவுகள் நாளுக்கு நாள் இரண்டு லட்சத்தை தாண்டி பதிவாகிக் கொண்டு வருகிறது.
இதன் விளைவாக ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு விதிகளை அமல் படுத்தி வருகின்றன. அதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நெறிமுறைகள் மக்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா பரவலின் காரணமாக இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கொரோனா பரவலின் அதிகரிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்துகிறார்.
காணொலி மூலம் நடைபெறும் ஆலோசனையில் 9 மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஹரியானா. உத்தர காண்ட், டெல்லி, உத்தரபிரதேசம், பீகார் மாநில அமைச்சர்கள் இதில் பங்கேற்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கொரோனாவின் பாதிப்பை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
