Connect with us

பொறியியல் கலந்தாய்வு: அமைச்சர் பொன்முடி அதிரடி அப்டேட் !!

Ponmudi

Tamil Nadu

பொறியியல் கலந்தாய்வு: அமைச்சர் பொன்முடி அதிரடி அப்டேட் !!

அண்ணா பல்கலைக்கழகங்களில் நடப்பாண்டில் கலந்தாய்வு எப்போது நடைபெறும் என்ற கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்து வந்தது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் பொன்முடி நீட் தேர்வு நடைபெற்ற பிறகு அண்ணா பல்கழக கலந்தாய்வு நடைபெறும்  என கூறினார்.

கடந்த ஆண்டில் நீட் தேர்வு நடைபெறுவதற்கு முன்னரே அண்ணா பல்கலைகழகங்களில் கலந்தாய்வு நடைபெற்றதால் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக கூறினார்.

இந்நிலையில் வருகின்ற 17 ஆம் தேதி மாலை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் ஆலோசனை நடத்திய பிறகு இதுகுறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்தார்.

இதனிடையே கடந்த ஆண்டு ஆன்லைனில் நிறைய முறைகேடுகள் நடைபெற்றதாகவும் இதனை கூடுமான அளவு தடை செய்ததாகவும் அமைச்சர் கூறினார். இதனை சரிப்படுத்தி ஆன்லைன் முறையில் கலந்தாய்வு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக கூறினார்.

மேலும், நீட் தேர்வு முடிந்த பிறகுதான் அண்ணா பல்கலைகழகங்களில் கலந்தாய்வு கட்டாயம் நடைபெறும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top