Connect with us

மேகதாதுவில் அணை கட்டும் பணி இந்த ஆண்டே தொடங்கும்: கர்நாடக முதலமைச்சர் அதிரடி !!

201908071126101453 mekedatu dam karnataka not allowed SECVPF

Tamil Nadu

மேகதாதுவில் அணை கட்டும் பணி இந்த ஆண்டே தொடங்கும்: கர்நாடக முதலமைச்சர் அதிரடி !!

மேகதாதுவில் அணை கட்டும் பணி இந்த ஆண்டே தொடங்கும்: கர்நாடக முதலமைச்சர் அதிரடி !!

கர்நாடக மாநிலத்தில் நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில் மேகதாது  அணை கட்டுவதற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த செய்தி தமிழக விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மேகதாது அணைகட்டும் பணி இந்த ஆண்டே தொடங்கும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறி இருப்பது காவேரி நதிநீர் பிரச்சணையை மேலும் சிக்கல் ஆக்கியுள்ளது.

பெங்களூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் வருகின்ற 2040 ஆம்- ஆண்டிற்குள் மக்கள் தொகை  4 கோடி வரை உயரும் நிலை உள்ளதாக குறிப்பிட்டார். இதனால் பெங்களூரு மாநகரில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு மேகதாது அணை கட்டுவது அவசியம் என தெரிவித்தார்.

இதனிடையே  மேகதாது திட்டத்திற்கு ஒன்றிய சுற்றுச்சூழல் அனுமதி விரைவில் கிடைக்க வேண்டும் என்றும் அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என அவர் கூறினார்.

மேலும், இந்த ஆண்டே மேகதாதுவில் அணை கட்டும் பணி தொடங்கப்படும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை திட்டவட்டமாக கூறியுள்ளார்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Tamil Nadu

To Top