
செய்திகள்
பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல சதி! – 3 தீவிரவாதிகள் கைது;;
பீகார் சென்ற மோடியை கொல்ல சதி செய்ததாக 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் பீகார் சென்று சட்டப்பேரவை நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பிரதமரை கொல்ல சிலர் சதிதிட்டம் தீட்டியதாக முகமது ஜலாலுதீன், அக்தர் பர்வேஸ் ஆகிய 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களை விசாரணை நடத்தியப்போது அர்மான் மாலிக் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். இதனிடையே இவர்களின் வீடுகளில் இருந்து பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ, சிமி உள்ளிட்ட பரப்புரை ஆவனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த இருவர் உடனும் கேரளா, மேற்குவங்கம், உத்தர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் சிலர் தொடர்பில் இருந்ததாகவும், இவர்களுக்கு வங்கதேசம், துருக்கி, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்த தீவிரவாதிகளுக்கு நிதியுதவி கிடைத்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து தேசிய பாதுகாப்பு முகமையும் விசாரணை நடத்தி வருகிறது. இந்த சூழலில் தீவிரவாதிகள் தங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் இல்லை என்று பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
