Connect with us

சிறந்த காவலர்கள் வேணுமா? “போலீசுக்கு 10 சதவீதம் கூடுதல் ஊதியம் தர பரிசீலியுங்கள்!!”

News

சிறந்த காவலர்கள் வேணுமா? “போலீசுக்கு 10 சதவீதம் கூடுதல் ஊதியம் தர பரிசீலியுங்கள்!!”

f9b234625a1dae32e77217e647ec90db

தற்போது படிக்கின்ற இளைஞர்கள் மத்தியில் படித்து முடித்தவுடன் அவர்கள் அரசு வேலை செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு படிக்கின்றனர். அதிலும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் போலீஸ் வேலை என்பது மிகவும் போட்டி நிறைந்த வேலையாக காணப்படுகிறது. அதற்காக அவர்கள் உடலை தகுதி செய்தும் கடினப்பட்டு முயற்சிக்கின்றனர். மேலும் அவர்களுக்கு உதவும் வண்ணமாக உயர்நீதிமன்ற மதுரை கிளை சில அறிவுறுத்தல்களை கூறியுள்ளது.6757584bff1c001c60edd2dfbd10aedf-1

அதன்படி போலீசாருக்கு 10 சதவீதம் கூடுதல் ஊதியம் வழங்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் மூன்று ஷிப்ட் அடிப்படையில் காவல் துறையினருக்கு 8 மணி நேர வேலையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளது, ஆட்கள் பற்றாக்குறை உள்ள நிலையில் காவல்துறையினர் மன உளைச்சலுடன் பணிபுரிகின்றனர் என்றும் நீதிபதிகள் கூறினர்.

காவல்துறையினர் மகத்தான பணியை வேறு எந்த பணிவுடனும் ஒப்பிட முடியாது என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. விடுமுறை இன்றி 24 மணி நேரமும் பணிபுரிவதால் தான் சில நேரங்களில் போலீசார் கோபம் அடைகின்றனர் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றினால் மட்டுமே சிறந்த காவலர்களை எதிர்பார்க்க முடியும் என்று நீதிபதிகள் கூறினர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top