அடுத்தடுத்து குவியும் பட வாய்ப்புகள்… குஷியில் சின்னத்திரை நடிகை…!
சின்னத்திரையில் நடித்து வந்த ஒரு இளம் நடிகைக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி வருகிறாராம் அந்த நடிகை. அவர் வேறு யாருமல்ல சின்னத்திரை நடிகை சோசியல் மீடியா குயின் ஷிவானி நாராயணன் தான்.
சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஷிவானி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமானார். இதனை தொடர்ந்து கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் ஷிவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். முதல் படமே பெரிய பட்ஜெட் படம் மற்றும் பெரிய ஹீரோக்கள் என்பதால் ஷிவானி மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார்.
இந்நிலையில் தான் அடுத்ததாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ஒன்றில் போலீஸ் கேரக்டரில் நடிக்க ஷிவானி ஒப்பந்தமானார். இந்த அறிவிப்பை சமீபத்தில் தான் அவரே கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது தனது மூன்றாவது படத்தின் அறிவிப்பையும் ஷிவானி வெளியிட்டுள்ளார். அதன்படி ஷிவானி அடுத்ததாக ஆர்ஜே பாலாஜி இயக்கி நடிக்கும் புதிய படத்தில் இணைய உள்ளதாக அறிவித்துள்ளார். நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் தன்னை நிரூபித்து வரும் ஆர்ஜே பாலாஜி மூக்குத்தி அம்மன் படத்திற்கு பின்னர் தனது அடுத்த படத்தை இயக்கி நடிக்கும் பணிகளை தொடங்கியுள்ளார்.
மூக்குத்தி அம்மன் படக்குழுவினர் தான் இந்த புதிய படத்திலும் பணிபுரிய உள்ளார்களாம். எல்கேஜி மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகிய இரண்டு படங்களிலும் அரசியல் பேசிய ஆர்ஜே பாலாஜி இந்த படத்திலும் அரசியல் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இவருடன் ஷிவானி இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
