இந்த காலத்தில் ஆதாயம் இருந்தால் மட்டுமே உறவினர்கள்கூட நமக்கு உதவி செய்வார்கள். மனிதனுக்கு மனிதனே உதவி செய்ய யோசிக்கும் இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு விலங்கு மற்ற விலங்குக்கு உதவி செய்வதை பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது.
அந்த வகையில் தற்போது சோசியல் மீடியாவில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் காட்டெருமை ஒன்று ஆமைக்கு உதவி செய்கிறது. தன் இனத்தை சேராத மற்ற விலங்கு ஒன்றிற்கு காட்டெருமை உதவி செய்யும் இந்த வீடியோ ஆயிரக்கணக்கில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் IFS அதிகாரி சுசாந்தா நந்தா அவரது டிவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். மேலும், “எல்லோரும் அன்பாக நடந்துகொள்ளலாம். எருமை ஆமையைத் திருப்பிவிட்டு காப்பாற்றியது போல” என்று கேப்ஷனும் கொடுத்துள்ளார்.
வெறும் பத்தே வினாடிகள் உள்ள அந்த வீடியோவில், மரத்தின் அருகே நின்றுகொண்டிருந்த எருமை, சட்டென கீழே குனிந்து திரும்ப முடியாமல் தலைகீழாக கவிழ்ந்து கிடந்த ஆமையை தன் கொம்புகளால் திருப்பி விட்டு அதற்கு உதவி செய்கிறது. இதனை கண்ட சிலர் கைதட்டி எருமையின் செயலுக்கு பாராட்டு தெரிவிக்கிறார்கள்.
இரண்டு நாட்களுக்கு முன்பு பகிரப்பட்ட இந்த வீடியோ 66,000க்கும் அதிகமான வியூஸ்களையும், லைக்குகளையும் குவித்துள்ளது. என்னதான் அது ஒரு விலக்காக இருந்தாலும் உதவி செய்வதில் மனிதர்களை மிஞ்சிவிட்டது. விலங்குகளிடத்திலும் மனிதநேயம் உள்ளது என்பது இதுபோன்ற சம்பவங்கள் மூலம் அவ்வபோது தெரியவருகிறது. இதை பார்த்தாவது சில மனிதர்கள் மனம் மாறினால் நல்லது.