Connect with us

ஆக.28-ம் தேதி காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்: யாருடைய தலைமையில் நடைபெறும்?

sonia gandhi 1200 5

செய்திகள்

ஆக.28-ம் தேதி காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்: யாருடைய தலைமையில் நடைபெறும்?

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த மே மாதம் சிந்தனை அமர்வு கூட்டமானது டெல்லியில் நடைப்பெற்றது. அப்போது காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை நியமனம் செய்வது குறித்து அமைச்சர் கேள்வியெழுப்பினர்.

இந்நிலையில் தேதி குறிப்பிடாமல் இது குறித்து காரிய கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என கூறப்பட்டது. அதன் படி, தற்போது வருகின்ற ஆகஸ்ட் 28ஆம் தேதி காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைப்பெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு சோனியாகாந்தி தலைமையில் நடைப்பெறும் இந்த கூட்டமானது காணொலி வாயிலாக நடைப்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2024-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் உட்கட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்க படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top