Connect with us

வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டி? சோனியாவிடம் கோரிக்கை;

காங்கிரஸ்

செய்திகள்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டி? சோனியாவிடம் கோரிக்கை;

வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டி? சோனியாவிடம் கோரிக்கை;

கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. ஏனென்றால் காங்கிரஸ் கட்சி தற்போது வரை இரண்டு மாநிலங்களில் தான் ஆட்சி செய்து வருகிறது. குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை ஆம் ஆத்மி கட்சியினர் பெற்றுக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் அதிரடியாக 5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் உடனடியாக மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி எவ்வாறு இருக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்கள் முக்கிய உறுப்பினர்கள் கலந்து ஆலோசித்த நிலையில் தனித்து போட்டியிட கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது.

அதன்படி வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட பிரசாந்த் கிஷோர் ஆலோசனை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவை சந்தித்த தேர்தல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.

உத்தரபிரதேசம், பீகார், ஒடிசா தனித்து போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம், மேற்கு வங்கம், மகாராஷ்டிராவில் கூட்டணி அமைத்து காங்கிரஸ் போட்டியிடவும் ஆலோசனை என தகவல் வெளியாகி உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் 370 தொகுதிகளில் காங்கிரஸ் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கூறியதாக தகவல் வெளியாகியது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top