பிபின் ராவத் பெயரை சொல்லி ஓட்டு கேட்கும் காங்கிரஸ்! பரப்புரையில் மோடி தீவிர பேச்சு;

கடந்த ஆண்டு நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதில் பயணித்த 14 வீரர்கள் அனைவரும் உடல் கருகி உயிரிழந்தனர். அதில் முப்படை தளபதி பிபின் ராவத் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி இருவரும் அந்த ராணுவ ஹெலிகாப்டரில் பயணம் செய்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிபின் ராவத் பெயரை வைத்து அரசியல் பண்ணுவதாக பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

அதன்படி ஓட்டுக்காக பிபின் ராவத் பெயரை காங்கிரஸ் பயன்படுத்துவதாக அவர் கூறினார். மறைந்த ராணுவ தளபதி பிபின் ராவத் பெயரை பயன்படுத்தி வாக்கு சேகரிக்கிறது காங்கிரஸ் கட்சி என்று பிரதமர் மோடி பேசினார்.

உத்தரகாண்ட் மாநிலம் ஸ்ரீநகரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பாரத பிரதமர் நரேந்திரமோடி காங்கிரஸ் மீது இவ்வாறு குற்றச்சாட்டை வைத்தார். முப்படை தலைமைத் தளபதியாக பிபின் ராவத் நியமனத்தில் அரசியல் செய்தது காங்கிரஸ் கட்சிதான் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment