நம் இந்தியாவே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பது உத்தரபிரதேச மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலுக்கு தான். ஏனென்றால் உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.
அங்கு மட்டுமின்றி உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இருந்தாலும் உத்தரபிரதேசம் தான் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானதாக காணப்படுகின்றது.
ஏனென்றால் உ.பியில் ஆட்சியிலிருக்கும் பாஜக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் வரிசையாக தங்களது பதவிகளை ராஜினாமா செய்து இதர கட்சிகளில் இணைந்து வருகிறார்கள். இந்த நிலையில் சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட இதர கட்சிகள் வேட்பாளர்களையும் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி குவித்து வருகின்றனர்.
அந்த வகையில் காங்கிரஸ் கட்சியானது உத்தரபிரதேசத்தில் கலந்துகொள்ள உள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பிரச்சாரம் செய்ய விருக்கும் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
அதில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, குலாம் நபி ஆசாத், அசோக் கெலாட் உள்ளிட்ட 30 தலைவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.