Connect with us

2024 தேர்தலுக்கு பக்கா பிளான் போடும் காங்கிரஸ்!!

top-cong-leaders-write-to-sonia-gandhi

செய்திகள்

2024 தேர்தலுக்கு பக்கா பிளான் போடும் காங்கிரஸ்!!

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றியை குறிக்கோளாக வைத்து அரசியல் விவகாரங்கள் , தேர்தல் பணி மற்றும் யாத்திரை விவகாரங்கள் குறித்து கட்சி குழுக்கல் அறிவித்துள்ளது.

இந்த குழுக்களில் பா.சிதம்பரம், ஜோதிமணி இடம்பெற்றுள்ளனர். தேர்தலில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்ததால் கட்சிகளுக்கு புத்துயிர் அளிப்பது குறித்த ஆலோசனை நடத்த ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் காங்கிரஸ் சிந்தனை அமர்வு கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

அதே கட்சியை பலப்படுத்துவது தேர்தல் விஷயங்கள் போன்ற பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் பல சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மக்களவைத் தேர்தலுக்கு தயாராகும் பொருட்டு விவகாரங்கள் குழு, தேர்தல் பணி மற்றும் யாத்திரை ஆகியவற்றை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த  குழுவில் ராகுல் காந்தி,மல்லிகார்ஜூன கார்கே, குலாம்நபி ஆசாத், அம்பிகா சோனி ,திக் விஜய்சிங், ஆனந்த சர்மா, கே.சி. வேணுகோபால் மற்றும் ஜிதேந்திட சிங், ப.சிதம்பரம், ஜெயராம் ரமேஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் தகவல் தொடர்பு, செய்தித்துறை வளர்ச்சி நிதி மற்றும் தேர்தல் மேலாண்மை ஆகிய பணிகளை மேற்கொள்ள இந்த குழுவிற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top