Connect with us

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் மரணம்!!

paola-maino

செய்திகள்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் மரணம்!!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ  கடந்த 27ம் தேதி இத்தாலியில் காலமானார்.

கடந்த சில நாட்களாகவே சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் காங்கிரஸ் கட்சி இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் தாய் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி சனிக்கிழமை அன்று இத்தாலியில் உள்ள அவரது வீட்டில் காலமானதாகவும், நேற்றைய தினத்தில் அவரது இறுதிச் சடங்கு நடைப்பெற்றதாக காங்கிரஸ் பொதுச் செயலாளரும், பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

இத்தகைய பதிவிற்கு காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். அதோடு பல கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top