மோடியை கொல்ல தயாராக இருங்கள்.. காங்கிரஸ் பிரமுகர் பேச்சால் பரபரப்பு!

பிரதமர் மோடியை கொலை செய்ய தயாராக இருங்கள் என காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் ராஜா படேரியா. இவர் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் அவர், ‘மோடியை கொல்ல தயாராக இருங்கள் என்றும் மோடிக்கு இந்த தேர்தல் முடிவு கட்ட வேண்டும் என்றும் அவர் வெற்றி பெற்றுவிட்டால் ஜாதி மதம் மொழி அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்துவார் என்றும் கூறினார்.

மேலும் தலித்துகள் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிர்காலத்தில் பெரும் ஆபத்து உள்ளது என்றும் அரசியலமைப்பை காப்பாற்ற வேண்டுமென்றால் மோடியை கொல்ல தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ வைரல் ஆகி பெரும் கண்டனத்தை பெற்று வரும் நிலையில் இதுகுறித்து ராஜா படேரியா விளக்கம் அளித்தபோது மோடியை கொல்ல வேண்டும் என்பதற்கு மோடியை தோற்கடிக்க வேண்டும் என்றுதான் பொருள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாஜக பிரமுகர் ஒருவர் கூறியபோது படேரியாவின் பேச்சு காரணமாக மோடியை கொலை செய்யும் எண்ணத்தில் காங்கிரஸ் இருக்கின்றதா என்ற கோணத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.