Connect with us

ராகுலோடு இணைந்த முன்னாள் முதல்வர்; கேரளா நோக்கி செல்லும் காங்கிரஸின் நடைபயணம்!!

rahul gandhi march

செய்திகள்

ராகுலோடு இணைந்த முன்னாள் முதல்வர்; கேரளா நோக்கி செல்லும் காங்கிரஸின் நடைபயணம்!!

சில மாதங்களுக்கு முன்பு இந்திய அளவில் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் பலரும் எதிர்பார்த்த விதமாக காங்கிரஸ் கட்சியானது ஆட்சியில் இருந்த மாநிலத்திலும் தோல்வியை தழுவியது.

இதனால் காங்கிரஸ் கட்சியின் தலைமை சார்பில் அடுத்தடுத்து பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தின் முடிவில் ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது.

அதன்படி காங்கிரஸ் கட்சி சார்பில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செப்டம்பர் மாதத்தில் நடை பயணம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. நடைப்பயணத்தில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக கலந்து கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நடைபயணமானது கேரளா நோக்கி செல்கிறதாக தகவல் கிடைத்துள்ளது. இந்திய ஒற்றுமை பயணத்தை கேரள மாநிலம் பாற சாலை பகுதியில் இருந்து தொடங்கினார் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி.

பாறசாலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின் ராகுல் காந்தி நடைப்பயணத்தை தொடங்கினார்.

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சுதாகரன் உள்ளிட்டோர் இந்த நடைபயணத்தில் பங்கேற்று உள்ளதாகவும் தெரிகிறது.

தமிழகத்தின் கன்னியாகுமரியில் 4 நாள் நடைப்பயணத்தை மேற்கொண்ட நிலையில் கேரளாவில் நடைப்பெணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top