News
300 யூனிட் இலவச மின்சாரம்: அதிரடி அறிவிப்பால் இன்ப அதிர்ச்சியில் பொதுமக்கள்

மின்சார கட்டணம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில் திடீரென 300 யூனிட் இலவச மின்சாரம் என்ற அறிவிப்பு வந்தால் பொதுமக்களுக்கு எவ்வளவு சந்தோஷம் இருக்கும். அப்படி ஒரு அறிவிப்பை காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 8-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் மாநில தலைவர் சுபாஷ் சோப்ரா நேற்று வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் மாநகரம் முழுவதும் 100 இந்திரா உணவகங்கள் நிறுவப்படும். இவற்றில் ரூ.15-க்கு சாப்பாடு வழங்கப்படும். சேமிப்பை வலியுறுத்தும் வகையில், மின்சாரம் மற்றும் தண்ணீர், விநியோகத்தில் பணம் திரும்பப் பெறும் திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
