பஞ்சாபை இழந்த காங்கிரஸ்! மூன்றிலிருந்து இரண்டாக குறையும் ஆளும் மாநிலங்கள்!!
இன்று காலை முதல் இந்தியா முழுவதும் மிகவும் பரபரப்பாக உள்ளது. ஏனென்றால் இன்று காலை நடைபெற்ற 5 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் மத்தியில் ஆளும் பாஜக சட்டப்பேரவைத் தேர்தலிலும் முன்னிலை வகித்து வருவதாக காணப்படுகிறது.
அதன்படி உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய நான்கு மாநிலங்களில் பாஜக பெரும்பான்மை பெற்றுள்ளதாக காணப்படுகிறது. இதனால் தொடர்ந்து முன்னிலையில் பாஜக காணப்படுகிறது.
பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் புதிய ஆட்சி அமைய உள்ளது. ஏனென்றால் பஞ்சாபில் பாஜகவும் காங்கிரசும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஏனென்றால் பஞ்சாப்பில், டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்றுள்ளது காணப்படுகிறது.
அதன்படி 117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் 90 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியினர் முன்னிலை வகித்து வருகின்றனர். இந்தநிலையில் காங்கிரசுக்கு இந்த தேர்தல் பெரும் ஏமாற்றமடைந்த காணப்படுகிறது.
அதிலும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதன்படி பஞ்சாப்பில் ஆட்சியை இழப்பதால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எண்ணிக்கை மூன்றில் இருந்து இரண்டாக குறைந்துள்ளது.
இந்தியாவில் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் காங்கிரஸ் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜார்கண்ட், மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் கூட்டணியில் மட்டுமே காங்கிரஸ் உள்ளது என்பதும் குறிப்பிடதக்கது.
