இந்திய அளவில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதிலும் குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் முதலாம் கட்ட வாக்குப்பதிவு நேற்றைய தினம் நடைபெற்றது. அதன்படி உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இதனால் அரசியல் தலைவர்கள் ஒவ்வொரு மாநிலங்களிலும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி கோவா மாநிலத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
அப்போது பேசிய அவர், முந்தைய பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைத்திருந்தால் 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் கிடைத்தபோது போர்ச்சுகீசிய ஆளுகையில் இருந்து கோவாவை விடுவித்து இருக்கலாம் என்று கூறினார்.
போர்ச்சுகீசிய ஆளுகையில் இருந்து கோவை விடுவிக்க சுதந்திரத்திற்கு பின்பு 15 ஆண்டுகள் ஆனது; இது பலருக்கும் தெரியாது என்றும் பிரதமர் கூறினார். இதனால் கோவா மீது காங்கிரஸ் எப்போதும் பகை தான் என்று பரப்புரையில் மோடி கூறினார்.
கோவா இளைஞர்களின் அரசியல் கலாச்சாரம், விருப்பங்களை காங்கிரஸ் புரிந்து கொள்ளவில்லை என்றும் பிரதமர் மோடி கூறினார். கோவா மீது காங்கிரஸ் கட்சிக்கு எப்போதும் பகை உணர்வு உண்டு எனவும் பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு வைத்தார்.