கொரோனா பரவலுக்கு பிறகு முதன் முறையாக சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் ஆரம்பம்!!

முன்னொரு காலத்தில் மிகவும்  வலிமையான கட்சி என்றால் அனைவரும் கூறுவது காங்கிரஸ் கட்சியை தான். ஆனால் காலம் செல்ல செல்ல காங்கிரஸ் கட்சி பல்வேறு மாநிலங்களில் சரிய தொடங்கியது. காங்கிரஸ்

இருப்பினும் தமிழகத்தில் ஆளும் கட்சியோடு காங்கிரஸ் கட்சியின் கூட்டணி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியானது தமிழகத்தில் தனது வலிமையை காண்பித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்கியது. காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் தொடங்கியது.

இந்த கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலவரம், கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுப்பது  குறித்து விவாதிக்கப்படுகிறது. செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 56 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

உட்கட்சி தேர்தல் நடத்துவது குறித்து காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. கொரோனா பரவலுக்கு பிறகு முதன் முறையாக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நேரடியாக கூடி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment